உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

வேலை செய்தும் 18 மாதங்களாக சம்பளம் இல்லை : அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கலெக்டரிடம் மனு

கடலூர் : 

               பணி செய்தும் 18 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து தலைமையாசிரியர் அருளரசி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மூவரும் கடலூரில் நடந்த பாதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:விருத்தாசலம் தாலுகா, ஊமங்கலம் ஆதிதிராவிட நல அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 2004ம் ஆண்டு முதல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. 2008ம் ஆண்டில் நடந்த தணிக்கையின் போது தலைமையாசிரியையான எனக்கும் என்னுடன் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களான ஜெயப்பிரதா, கலைச் செல்வி, சுகந்திசெல்வி ஆகியோருக்கு அரசு ஆணை ஏற்பு எண் பெற்று வழங்காமல் வேறு ஏதோ ஒரு தலைப்பின் கீழ் மாத சம்பளம் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலம் எங்களது மாத சம்பளம் விருத்தாசலம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாரால் 2008 அக்டோபர் முதல் 2010 பிப்ரவரி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கீழ் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது.எங்களுக்கு எழுத்துப் பூர்வமான முன்னறிவிப்பு கொடுக்காமல் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, தீபாவளி முன்பணம், பொங்கல் பரிசு, அகவிலைப்படி உயர்வு உள் ளிட்ட அனைத்தும் நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பல முறை மனு கொடுத்தும் பலனுமில்லை, அதிகாரிகளிடமிருந்து முறையான பதிலும் இல்லை.கடந்த ஒன்னரை ஆண்டாக சம்பளம் பெறாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்கள் நிலையை கருதி எங்களின் பணி நிலையையும், "போஸ்ட் சாங்ஷன்' செய்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior