கிள்ளை :
அதிகாரிகளின் சமரச முயற்சியினால் பின்னத்தூரில் நெல் அறுவடை பணி நேற்று துவங்கியது.
சிதம்பரம் அடுத்த பின்னத்தூரில் நெல் பயிரை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கொடிப்பள்ளம் காலனியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4ம் தேதி சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த் தையை தொடர்ந்து மறுநாள் அறுவடை துவங்கியபோது கொடிப் பள் ளம் காலனியை சேர்ந்தவர்கள் அறுவடை செய்த இயந்திரத்தை சேதப்படுத்தியதுடன், டிரைவர்களையும் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இருகிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இது தொடர்பாக சிதம்பரம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) செல்வராஜ், தாசில்தார் காமராஜ், டி.எஸ்.பி., மூவேந்தன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. விவசாய சங்க தலைவர் ராஜாராமன், மாவட்ட கவுன்சிலர் நல்லத்தம்பி, த.மு.மு.க., மாநில துணை செயலாளர் ஜின்னா, அமீர்பாஷா, பின்னத்தூர் ஜமாத் நிர்வாகிகள் முகம்மது ஜக்கரியா, முகம்மது அயூப், கொடிப்பள்ளம் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அறுவடை உள்ள நாட்கள் வரை கூலியாட்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். விவசாயி பாதிக்காத வகையில் முற்றிய நெற்கதிர்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினர். அதனை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து நேற்று முதல் கூலியாட்கள் மற்றும் இயந்திரம் மூலம் தனித் தனியாக நெல் அறுவடை பணி துவங்கியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக