கடலூர் :
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., கடலூர் மகிளா கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். சிதம்பரம் கச்சேரி தெருவைச் சேர்ந்தவர் குமார் (29). இவரது மனைவி வசந்தபிரியா(23). திருமணத்திற்கு 25 சவரன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக வசந்தபிரியா பெற்றோர் கொடுத்தனர்.இந்நிலையில் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு வசந்தபிரியாவை துன்புறுத்தி வந்தனர். விரக்தியடைந்த வசந்தபிரியா, கடந்தாண்டு ஜனவரி 8ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் குமார், அவரது தந்தை மோட்சகுரு, தாய் சந்திராவை சிதம்பரம் போலீசார் கைது செய்து, கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட சிதம் பரம் ஏ.எஸ்.பி., (சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.,) நரேந்திரன் நாயர், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சப் இன்ஸ்பெக்டர் வனஜா உள்ளிட்ட 9 பேர் நீதிபதி அசோகன் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கு விசாரணையை, வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக