உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 10, 2010

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் அனுமதிச் சீட்டு வழங்கல்

கடலூர் : 

                பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று முதல 13ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

அரசுத் தேர்வுகள் மண் டல துணை இயக்குனர் ராமச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  

              மார்ச் 2010ம் ஆண்டு பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று முதல் 13ம் தேதி வரை வழங்கப்படுகிறது. காரைக்கால் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி கல்வே காலேஜ் அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம் வால்டர் ஸ்கேடர் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.அனுமதிச் சீட்டில் ஏதேனும் பிழை இருந்தாலோ அல்லது அனுமதிச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் கூடுதல் செயலாளர் (மேல் நிலை) அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 விலாசத்தில் நேரிலோ அல்லது கடிதம் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

          எழுத்துத் தேர்வு, செய் முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர் வில் தேர்ச்சி பெறாதவர் கள் கண்டிப்பாக எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளை செய்ய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும்.முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித் தேர்வர்கள் பகுதி-1, 2 மொழிப் பாடத்தின் 2ம் தாள் மற்றும் பகுதி-3ல் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வுகளை கண்டிப்பாக செய்ய வேண்டும்.மொழிப் பாடங்களில் கேட்டல்/பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட் டல்/பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை வரும் 18ம் தேதிக்குள் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்றி எந்த ஒரு தேர்வும் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.தேர்வு எழுதும் முதல் நாளன்று தமது வீட்டு முகவரியுடன் 30 ரூபாய் தபால் தலை ஒட்டிய பெரிய அளவு உறை ஒன்றை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு கண்டிப்பாக தபாலில் அனுப்பப்பட மாட்டாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior