சிறுபாக்கம் :
நல்லூர் ஒன்றிய வேளாண் வளர்ச்சி அலுவலகத்தில் விவசாய தகவல் (ஆத்மா) மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் அப்பன்ராஜ் முன்னிலை வகித்தார். தோட் டக்கலை அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். உறுப்பினர்கள் தங்கதுரை, சக்திவிநாயகம், அண்ணாமலை, ஜெயந்தி, சங்கர், அம்பிகா, ஜெயராமன், வேளாண் அலுவலர்கள் இளவரசன், கங்கைமணி, கால்நடை மருத்துவர் தில்லைகோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஒன்றியத் தில் 50 விவசாயிகளை தேர்வு செய்து நாமக்கல், ஈச்சங்கோட்டை உள் ளிட்ட பகுதிகளில் கால் நடை வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கவும், தோட்டக்கலை பயிர்களான வாழை, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிக்கவும், சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவது, சிறப்பு கட்டணத்தில் மண், நீர் பரிசோதனை செய்திடுவது குறித்து கலந்தாய்வு நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி பேசுகையில், மாவட் டத்தில் பின்தங்கிய நல் லூர் ஒன்றியத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள விவசாய மானியங்கள் நலத்திட்ட உதவிகளை வேளாண் அலுவலர்கள் தங்களின் களப்பகுதிகளுக்கு சென்று திட்ட பயன்களையும், வேளாண் குறித்த சந்தேகங்களையும் விளக்கி செயலாற்ற வேண் டும் என வலியுறுத்தினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக