பரங்கிப்பேட்டை :
அனல் மின்நிலையம் கட்டுவதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என அனல்மின் நிலையம் கட்டுவதற்கான கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.சிதம்பரம் அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் சென்னை ஐ.எல்.எப். எஸ்., என்ற தனியார் நிறுவனம் 780 கோடி ரூபாயில் 3,600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்க உள் ளது. அதற்காக மாசுகட்டுப் பாடு வாரியம் சார் பில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் த்துக்குப்பத்தில் நேற்று நடந்தது. மாவட்ட மாசுகட்டுபாடு வாரிய பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சாமிவேல், தாசில்தார் காமராஜ், டி.எஸ்.பி., மூவேந் தன் உள்ளிட்ட அதிகாரிகளும், கடற்கரையோர கிராம மக் கள் பங்கேற்றனர். கூட்டத் தில், ஐ.எல்.எப். எஸ்., நிறுவன தலைவர் சீனிவாசன் பேசுகையில், "3,600 மெகாவாட் அனல் மின் நிலையம், சுயதேவைக்கான துறைமுகம், கடல்நீரை நல்ல நீராக்கும் நிலையம் கட்டப்பட உள் ளது. அதற் காக புதுக் குப்பம் சுற்றியுள்ள கிராமங்களில் 700 ஏக்கர் நிலம் வாங்கப் பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும், ஒரு சொட்டு தண்ணீர் கூட எடுக்காமல் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். 300 ஏக்கரில் மரங்கள் நடப்படும். ஐந்தாயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். இந்த அனல்மின் நிலையத்தால் விவசாயிகளுக்கோ, மீனவர்களுக்கோ எந்த பாதிப்பும் வராது' என்றார். பின்னர் கிராம மக்கள் கருத்து கூறினர்.
பஞ்சங்குப்பம் ராமலிங்கம்:
விவசாய நிலங் களை புரோக்கர்கள் ஏக்கர் நான்கு லட்சத்திற்கு வாங்கி அதிக விலைக்கு விற்று எங்களை மோசடி செய்துள் ளனர். அவர்கள் மீது கலெக் டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிள்ளை செழியன்:
அனல் மின் நிலையத்தால் மீனவர் கள், வி வசாயிகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. சுற்றுசூழல் பாதித்து கேன்சர் நோயால் மக்கள் பாதிக்கப்படுவர்.
அன்னப்பன்பேட்டை ராமலிங்கம்:
இப்பகுதி இளைஞர்கள் வேலை கிடைக்காமல் வெளிநாட் டில் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர் களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரவேண்டும்.
சிலம்பிமங்களம் ஊராட்சி துணைத் தலைவர் சந்திர கலா:
இங்கு அனல்மின் நிலையம் வருவதை வரவேற்கிறோம். இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரவேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக