சிதம்பரம் :
சிதம்பரத்தில் 12வது உலக சைவப் பேரவை மாநாடு பிரம் மாண்ட பேரணியுடன் நேற்று துவங்கியது. ஆதினங்கள், சிவநெறியாளர்கள், அறிஞர்கள், சிவ தொண்டர்கள் என 2,000 பேர் பேரணியில் பங்கேற்றனர். தமிழர்கள் சிவ நெறியில் சிறக்க வேண்டும்; சைவ சமய பெருமைகள் அனைவரும் அறிய வேண்டும் என்ற நோக்கில் உலக சைவப்பேரவை அமைப்பு ஒவ்வொரு நாட்டிலும் மாநாடு நடத்தி வருகிறது. 12வது மாநாடு, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நே ற்று துவங்கியது. டி.எஸ்.பி., மூவேந்தன் துவக்கி வைத்த மாநாடு, மூன்று நாட்கள் நடக்கிறது. சிதம்பரம் அடுத்த திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவில் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமஞ்சனம் மற்றும் வழிபாடு நடந்தது. மாலை சிதம்பரம் கீழ வீதியில் இருந்து ஆதினங்கள், சிவநெறியாளர்கள், திருமுறை, சைவ சிந்தாந்த குழுக்கள், அறிஞர்கள், சிவ தொண்டர்கள், வெளி நாட்டு அறிஞர்கள் என 2000 பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி துவங்கியது.
சிதம்பரம் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமை தாங்கினார். சுந்தரேசம்பிள்ளை திருமுறைகள் ஓதினார். அவரை தொடர்ந்து, 63 நாயன்மார்கள் உருவச் சிலைகள் மற்றும் நாயன்மார்கள் வேடமிட்ட சிறுவர்கள் பேரணியில் பங்கேற்றனர். இசை வாத்தியங்கள் முழங்க, மேள தாளத்துடன் பேரணி நடந்தது. பேரூர் இளைய மடாதிபதி மருதாச்சல அடிகள், ருப்பனந்தாள் ஆதினம் சுந்தரமூர்த்தி தம்பிரான்,கோவை சின்னவளம்பட்டி சிரவை ஆதினம் குமருகுரு, தருமை ஆதினம் திருநாவுக்கரசு தம்பிரான், பழனி சாது சண்முக அடிகளார், திருப்பனந்தாள் முத்துக்குமாரசாமி தம்பிரான், விழா ஒருங்கிணைப் பாளர் பத்மினி கபாலிமூர்த்தி பேரணியை வழிநடத்தி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக, அண்ணாமலை பல்கலை மாநாட்டு திடலை அடைந்தது. பின்னர் சாஸ்திரி அரங் கில் மாநாடு துவங்கியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக