காட்டுமன்னார்கோவில் :
காட்டுமன்னார்கோவில் ஜெ., பேரவை நகர செயலாளரை தாக்கிய அ.தி.மு.க., வினர் 10 பேரை போலீசார் தேடிவருகின்றனர். காட்டுமன்னார்கோவில் ஜெ.,பேரவை நகர செயலாளராக கோவிந்தன். இவர் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் மீது கட்சி தலைமையில் புகார் செய்தார். இந்நிலையில் 10 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து கோவிந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியது. காயமடைந்த கோவிந்தன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர், அ.தி.மு.க., நகர செயலாளர் எம்.ஜி.ஆர் தாசன் துண்டுதலின்பேரில் கோட்டைமேடு அ.தி.மு.க., நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து என்னையும், எனது குடும்பத்தினரையும் தாக்கியதாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், எம்.ஜி.ஆர். தாசனை கொலை செய்துவிடுவதாக கோவிந்தன் மிரட்டியதாக அவரது உறவினர் சுந்தர்ராஜன் காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய் துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக