ஸ்ரீமுஷ்ணம் :
தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கள்ளிப்பாடி ஆற்றில் மணல் குவாரி திறக்க கிராம மக்கள் ஒப்புக் கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி வெள்ளாற்றில் மணல் குவாரி இயங்கி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் மூடப்பட்டது. மீண்டும் கடந்த ஜனவரி 4ந் தேதி குவாரியை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்ற போது, ஆற்றில் மணல் அள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.இதுதொடர்பாக நேற்று ஸ்ரீமுஷ்ணம் சுற்றுலா மாளிகையில் காட்டுமன்னார்கோயில் தாசில்தார் வீரபாண்டியன், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் ஊராட்சி தலைவர்கள் காவனூர் கங்காதரன், கள்ளிப்பாடி தங்கசாமி, தி.மு.க., கிளை செயலாளர் மணிகண்டாமணி, ஆளவந்தார், ராமஜெயம், தமிழ்மணி, கிராம முக்கியஸ்தர்கள் நாகேஸ்வரன், சண்முகம், ஜாபர், மாட்டு வண்டி சங்க தலைவர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் கள்ளிப்பாடி- காவனூர் செல்லும் வழியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், காவனூர் கிராம எல்லையில் மணல் அள்ளக்கூடாது. மாட்டு வண்டிகள் காவனூர் செல்லும் பாதையில் இருந்து 75 மீட்டர் தூரம் உள்ளே சென்று மணல் அள்ள வேண்டும். மணல் அள்ள செல்ல ஆற்றில் தற்காலிக சாலை அமைக்க வேண்டும். குவாரி அலுவலகத்தை வெள்ளாற்றின் கரையோரம் அமைத்து கண்காணிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று குவாரியை செயல்படுத்த இரு கிராம மக்களும் ஒப்புக் கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக