உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 06, 2010

அறுவடை மிஷினின் டிரைவர்களை தாக்கிய மர்ம ஆசாமிகளுக்கு வலை

கிள்ளை : 

                  சிதம்பரம் அருகே நெல் அறுவடை செய்த மிஷினின் டிரைவர்களை தாக்கிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரம் அடுத்த பின்னத்தூரில் ஆட்கள் கிடைக்காததால் நெல்லை இயந்திரம் மூலம் அறுவடை செய்தனர். இதனைக் கண்டித்து விவசாய சங்கத்தினர் நேற்று முன்தினம் கிள்ளை-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் காமராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி நேற்று பின்னத்தூரை சேர்ந்த 45 பேர்  நெல் அறுவடை பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கதிர் முற்றிய சாய்ந்த நிலங்ளில் இயந்திரங்களை கொண்டு அறுவடை செய்யப்பட்டது. அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அறுவடை இயந்திரத்தின் டிரைவர் மயிலாடுதுறை அடுத்த பழைய கூடலூரை சேர்ந்த ராமதாஸ் (23) மற்றும் இருவரை தாக்கிவிட்டு தப்பி சென்றது. காயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிதம்பரம் டி.எஸ்.பி., மூவேந்தன், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் சம்பவ இடத்திற்கு சென்று விசா ரணை நடத்தினர். இது குறித்து கிள்ளை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior