கடலூர் :
பில்ராத் மருத்துவமனை, கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம் மற்றும் கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் குழுந்தையின்மை நல சிகிச்சை முகாம் பாதிரிக்குப்பத் தில் நாளை (7ம் தேதி) நடக்கிறது.
முகாமில் குழுந்தை இல்லாத தம்பதியினருக்கு இலவசமாக பரிசோதனை செய்து மருத் துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. முகாமில் பங்கேற்க தம்பதியினராக வரவேண்டும். இதற்கு முன்பு இது சம்பந்தமாக ஏதேனும் மருத்துவ சிச்சை பெற்றிருந்தால் அந்த விபரங் களை எடுத்து வர வேண்டும். மகப்பேறு மருத்துவர்கள் தாட்சாயணி, சியாமளா சிவாஜி ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்குகின்றனர். முகாமில் பங்கேற்க முன்பதிவு செய்திட 94450 76552, 94444 13854 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக