கடலூர் :
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடலூர் ஐ.டி.ஐ.,யில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அடிப்படை, குறுகியகால பயிற்சி திட்டத்தின் கீழ் எம்.இ.எஸ்., திறமையும் அனுபவமும் கொண்ட பயிற்றுனர்களைக் கொண்டு கடலூர் ஐ.டி.ஐ., யில் பின்வரும் தொழிற் பிரிவுகளில் இலவசமாக பயிற்சி அளிக்கப் படவுள் ளது. இப்பயிற்சி ஆண்டு முழுவதும் அரசிடமிருந்து மாற்று ஆணை பெறப்படும் வரை தொடர்ந்து நடத் தப்படும். அடிப்படை ஆட்டோ மோட்டிங் இரண்டு மற் றும் 3 சக்கர வாகனங்கள் பராமரித்தல், அடிப்படை பற்றவைப்பு, வீட்டு உபகரணங்கள் பழுது, வீட்டு ஒயரிங், அடிப்படை பொருத்துனர், கடைசலர், பிளாஸ்டிக் மோல்ட் அசிஸ் டெண்ட், கணினி இயக்குனர் மற்றும் திட்டமிடுதல் பிரிவுகளில் பயிற்சி நடைபெறவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அரசு வழங் கும் இலவச பயிற் சியை பெற்று அதற்குண்டான சான்று பெறும் வாய்ப் பினை பயன்படுத்திக் கொள்ள கடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக