உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 12, 2010

கடலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

கடலூர் : 

       கடலூர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையத்தை எஸ்.பி., திறந்து வைத்தார். கடலூர் பஸ் நிலையத்தில் இயங்கி வரும் புறக்காவல் நிலையம் கடைகள் இருக்கும் பகுதியில் இருப்பதாலும் அதற்கு முன்பாக பஸ்கள் நின்று மறைத்துக் கொள்வதால் அங்கு புறக்காவல் நிலையமே இல்லாதது போல் காணப்பட்டது.  பஸ் நிலையத்தை ஆய்வு செய்த எஸ்.பி., அஷ்வின்கோட்னீஸ் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படியும், எச்சரிக்கை அறிவிப்பு அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார். அதனையடுத்து பஸ் நிலையத் தில் நடுவில் உள்ள மணி கூண்டின் கீழ் புறக்காவல் நிலையம் திறக்க நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக ரூ.25 ஆயிரம் செலவில் புறக் காவல் நிலையமும், அருகில் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கும் இடத் தையும் பெயின்ட் அடித்து சீர் செய்தனர். அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு, தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் எஸ்.பி., கூறுகையில் "தாலுகா தலைநகரங்கள், நகரங்களில் உள்ள பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் இக்காவல் நிலையங்கள் செயல்படுவதில்லை என்ற புகார் வந்ததன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் ஆய்வு செய்யப் பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 24 மணிநேரமும் செயல்படும் இம் மையத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் டி.எஸ்.பி., 9445490300, இன்ஸ்பெக்டர் 94454 90297, சப் இன்ஸ்பெக்டர் 9445490298 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior