பண்ருட்டி :
பண்ருட்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்றியதால் பாதித்த நான்கு குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க தாசில்தார் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பண்ருட்டி அடுத்த ஏரிப் பாளையம், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் நான்கு பேர் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர்.
இந்த வீடுகளை பண்ருட்டி உரிமையியல் நீதிமன்ற உத்திரவுபடி கடந்த ஐனவரி 20ம் தேதி நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றினர். இங்கு வசித்த நான்கு குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க கோரி இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட் டம் இன்று(12ம்தேதி) நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இதுகுறித்து பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பாபு முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் ஏழுமலை, புரட்சிபாரதம் மாவட்ட செயலாளர் தெய்வீகதாஸ், வட்ட தலைவர் உத்திராபதி, மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றியதால் பாதித்த நான்கு குடும்பத்தினருக்கு வையாபுரிபட்டினம் கிராமத்தில் உள்ள தோப்பு புறம்போக்கில் வசிக்க இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இன்று நடைபெறுவதாக இருந்த சாலைமறியல் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக