உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

ரூ.​ 300 கோடி எங்கே?

கடலூர்,:

                      அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் தமிழகக் கல்வித் துறைக்கு ​ ஒதுக்கப்பட்ட ரூ.​ 300 கோடியை,​​ ​ கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அரசு மாற்றிவிட்டதாக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.அப்துல்மஜீது குற்றம் சாட்டினார்.

அவர் திங்கள்கிழமை கடலூரில் கூறியது:​ 

                      அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிகள்,​​ மேஜைகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளுக்கு மட்டும் மேஜை நாற்காலிகள் வாங்கப்பட்டன.​ ஆனால் அவற்றையும் ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி அகற்றி விட்டனர்.​  பெரும்பாலான பள்ளிகளுக்கு,​​ மேஜை நாற்காலிகள் வாங்கவே இல்லை.​ இதனால் செலவு செய்யாத உபரிநிதி ரூ.​ 300 கோடி ஆகும். இந்தத் தொகையை ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்துத்துக்கு ஒதுக்க இருப்பதாக அறிகிறேன்.​ இது முறையல்ல.​ தரையில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்கிறார்கள். தரையில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுக்க மாட்டோம் என்ற போராட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். 71 ​ மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதல்வர் அறிவித்தார். அந்தத் திட்டத்தை செயல்படுத்துவது போல் அரசு பள்ளிகளில் மட்டும் ஆசிரியர்களை நியமித்தார்கள்.​ மீண்டும் 99 மாணவர்களுக்கு இரு ஆசிரியர் என்ற வழக்கமான திட்டப்படி,​​ உபரிஆசிரியர்கள் என்று கூறி பலருக்கு மாறுதல் அளித்து விட்டனர். முதல்வர் அறிவித்தபடி அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவே இல்லை.​ முதல்வர் உத்தரவை கல்வித்துறை அதிகாரிகள் நிறைவேற்றுவது இல்லை. வசந்திதேவி தினமணி பத்திரிகை கட்டுரையில் தெரிவித்தபடி தமிழகத்தில் தொடக்கக் கல்வி பின்தங்கிய நிலையில்தான் உள்ளது.​ இதை கல்வித்துறை அதிகாரிகள் மறைக்கிறார்கள். மத்திய அரசு 14 வயது வரை கட்டாயக் கல்வி என அறிவித்து இருக்கிறது.​ ஆனால் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீதம் மாணவர்கள் இலவசக் கல்வியில் சேர்த்துக் கொள்வார்கள் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. இத்திட்டத்தில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.​ அதை தமிழக அரசு ஏற்க மறுத்து,​​ இன்னமும் 99 மாணவர்களுக்கு இரு ஆசிரியர் என்ற பழைய திட்டத்தையே நிறைவேற்றுகிறது. இதனால் தொடக்கக் கல்வி பின்தங்கிய நிலைக்கு செல்லாமல் என்ன செய்யும்.​ ​ 381 நடுநிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நீண்டகாலமாக நியமிக்கப்படவில்லை.​ அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் செயல்படும் நடுநிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும்,​​ மற்ற நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களையும் நியமிக்கிறார்கள்.​ மாணவர்களுக்குள் ஏன் இந்தப் பாகுபாடு?. தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 10 ஆயிரம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கும் வகையில் ஆசிரியர்களைத் திரட்டி வருகிறோம்.​ அவர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என்றார் மஜீது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior