கடலூரில் திங்கள்கிழமை காலை கடும் மூடுபனி காணப்பட்டது. கோடைகாலம் தொடங்கி விட்டது. எனினும் வழக்கத்துக்கு மாறாக பனிக் காலம் மார்ச் மாதம் வரை நீடித்து வருகிறது. பகல் நேரத்தில் கடுமையான வெயிலும், பின் இரவில் பலத்த குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை வெகுநேரம் வரை பனி நீடித்தது. காலை 6 மணிக்கெல்லாம் சாலைகளில் 50 அடி தொலைவில் வரும் வாகனங்களைக் கூட பார்க்க முடியவில்லை. குளிரும் கடுமையாக இருந்தது. காலை 7-30 மணி வரை சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுச் சென்றன. 7-30 மணிக்குப் பிறகே சூரியன் தனது முகத்தை மெல்லக் காண்பித்தது. அதைத் தொடர்ந்து பனி விலகத் தொடங்கியது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக