உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

இலவச வீட்டு மனைக்கேட்டு ஏழு இடங்களில் மறியல் : விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 731 பேர் கைது

கடலூர் : 

                        குடிமனைப்பட்டா மற்றும் புதிய வீட்டுமனைப்பட்டா கோரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் மறியல் செய்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 340 பெண்கள் உள்ளிட்ட 731 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் குடிமனைப்பட்டா, புதிய வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். விவசாய நிலங்களை வேறு பணிக்கு மாற்றுவதை தடுக்க சட்டம் இயற்றவேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நேற்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தினர். இதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில்,  குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக் குடி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. 

கடலூர்: 

                  ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் ஒன்றிய தலைவர் குமார், கோதண்டம், அரசன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலாளர் சுப்ராயன் உள்ளிட்ட 250 பேர் அண்ணா பாலம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். 

சிதம்பரம்: 

                          ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் முன்னாள் எம்.எல்.ஏ., வீரைய்யன் தலைமையில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநிலக் குழு மூசா, மாவட்டக்குழு நடராஜன், வாஞ்சிநாதன்,  ஊராட்சி தலைவர் ராஜசேகர் உள் ளிட்ட 120 பேர் மறியலில் ஈடுபட்டனர்.
 
திட்டக்குடி: 

                  மாநிலக்குழு உறுப்பினர் காமராஜ்  தலைமையில், வட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், ராஜேந்திரன், நகர செயலாளர்கள் வரதன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 57 பேர் தாலுகா அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர்.

பண்ருட்டி: 

                மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், வட்ட செயலாளர் ஏழுமலை, தனபால், உத்திராபதி, மணிவண்ணன், மா.கம்யூ., வட்ட செயலாளர் சேதுராஜன் மற்றும் 79 பெண்கள் உட்பட 150 பேர் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் தாலுகா அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். 

விருத்தாசலம்: 

                   வக்கீல் சந்திரசேகரன் தலைமையில் வட்டசெயலாளர்கள் சின்னப்பராஜ், ஜெயமணி, வட்ட தலைவர் மதியழகன், பொருளாளர் முத்துசாமி மற்றும் 7 பெண்கள் உட்பட 49 பேர்  பாலக்கரையில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். 

குறிஞ்சிப்பாடி:

          குறிஞ்சிப்பாடியில் மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமையில் 59 பேரும், 

காட்டுமன்னார்கோவில்:

                    காட்டுமன்னார்கோவிலில் மாநில குழு ராமசாமி தலைமையில் 46 பேர் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 340 பெண்கள் உள்பட 731  பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior