கடலூர் :
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக தொழிலாளர் சங்க மண்டலப் பொதுக்குழு கடலூரில் நடந்தது.
மண்டலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை செயலாளர் முத்துசாமி வரவேற்றார். மண்டலத் துணைத் தலைவர் தனஞ்செயன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தட்சிணாமூர்த்தி வரவு செலவு அறிக்கையை படித்தார். கூட்டத்தில் மாநில இணை பொதுச் செயலாளர் ராஜேவேல், இணை செயலாளர் ஸ்டாலின் தேவசகாயம், போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் பழனிவேல், பொதுச் செயலாளர் சிவகுநாதன் உள்ளிட்டோர் பேசினர். பின்னர் நடந்த தேர்தலில், தலைவராக கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ஞானசேகரன் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில் மறுக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக