உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

அரசு கட்டுப்பாட்டில் உள்ள 37,000 கோவில்களை கையகப்படுத்த வாதாடுவேன் : சுப்ரமணியசாமி தகவல்

சிதம்பரம் : 

                     சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசிடமிருந்து மீட்பேன் என ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறினார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுப்ரமணியசாமி நேற்று வந்தார்.  அப்போது அவரிடம், கோவிலில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டடத்தை இடித்துவிட்டு செயல் அலுவலர் அலுவலகம் கட்டப்படுகிறது. கோவில் உள்ளே கார் நிறுத்துகின்றனர். விதிமுறைகளை மீறி பல இடங்களில் உண்டியல் வைத்துள்ளனர். சாமி வருவதற்கு கூட வழிவிடாமல் ஆயிரங்கால் மண்டப வாயிலில் கூட்டம் நடத்தினர் என தீட்சிதர்களும், ஆலய பாதுகாப்பு குழுவினரும் கூறினர்.
 
                அதையடுத்து செயல் அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டுவரும் இடத்தை பார்வையிட்டார். அறநிலையத்துறை வைத்துள்ள பிரசாத கடையில் பிரசாதம் தயார் செய்யப் படுவது, விலை போன்றவற்றை விசாரித்தார். கோவிலுக்குள் சென்று உண்டியலை பார்வையிட்டார். பின்னர் சட்டையை கழற்றிவிட்டு கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கோவிலை கண்டிப்பாக மீட்டு தருவேன் என தீட்சதர்களிடம் கூறினார். 

அப்போது அவர்  கூறியதாவது:

                        நடராஜர் கோவிலில் நூறு ஆண்டுகள் பழமையான கட்டடத்தை இடித்து குளு, குளு வசதியுடன் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவது சட்ட விரோதமான செயல். ஐகோர்ட் தீர்ப்புப்படி 19 விதிகளில் ஒன்று கூட கடைபிடிக்கப்படவில்லை. சட்டத்தை மீறி உண்டியல் வைக்கிறார்கள். கட்டடத்தை இடிக்கிறார்கள். பல லட்ச ரூபாய் செலவு செய்கிறார்கள். கோவிலை அறநிலையத்துறை பொறுப்பேற் றதில் இருந்து இதுவரை 20 தவறுகள் செய்துள்ளனர். இதை ஆதாரத் துடன் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளேன். கோவில் சம்மந்தமாக வழக்கு முடியும் வரை அறநிலையத்துறை நிர்வாகம் செய்வதற்கு இடைக் கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் டில் மனு தாக்கல் செய்துள்ளேன். அது சம்மந்தமான விசாரணை வரும் 11ம் தேததி நடக்கிறது. அதில் நான் வாதாடுகிறேன். இந்த கோவில் மட்டுமல்ல தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 37,000 கோவில்களையும் கையகப்படுத்த வாதாடுவேன்.டில்லி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த நவம்பர் 27ம் தேதி கோவில் வழக்கு தொடர்பாக 6 வாரத்தில் விளக்கம் தர வேண்டும் என தமிழக அரசுக்கு அவகாசம் தெரிவிக்கப் பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் கூடுதலாக ஆகும் நிலையிலும் எந்த விளக்கமும் தரவில்லை. அதனால் வழக்கு கோவிலுக்கு சாதகமாக அமையும். இவ்வாறு சுப்ரமணியசாமி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior