கடலூர் :
கடலூர் முதுநகரில் மாசிமகத்தையொட்டி வாண வேடிக்கைகளுடன் தெப்பல் உற்சவம் நடந்தது.
கடலூரில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழாவையொட்டி தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் சோனங்குப்பம் வெங்கடேச பெருமாள், சிங்காரத் தோப்பு வெள்ளரி அம் மன், அக்கரைகோரி கண்ணனூர் அம்மன், சலங்கைகார தெரு நாகமுத்தாலம்மன் கோவில்களிலிருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் மீன்பிடி தளத்திற்கு படகு மூலம் கொண்டு வரப்பட்டது. வாண வேடிக்கைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் சுவாமி தரிசனத்தைத் தொடர்ந்து மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அதேப்போன்று தைக்கால் தோணித்துறை ஆற்றில் கருப்பு முத்தம்மன் சுவாமி தெப்பல் உற்சவமும் நடந்தது .கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக