கடலூர்:
ஓய்வூதியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ. 1 லட்சத்தில் இருந்து, ரூ. 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று, தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. கடலூரில் திங்கள்கிழமை நடந்த இச் சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3500 வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவப் படியை ரூ. 100ல இருந்து ரூ. 500 ஆக உயர்த்த வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ. 1.5 லட்சம் வழங்க வேண்டும். ஒருமாத ஊதியத்தை போனஸôக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பா.புருசோத்தமன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலர் என்.வேலு முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கந்தசாமி வரவேற்றார். மாவட்டச் செயலர் வையாபுரி அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்டப் பொருளர் ரகுபதி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.
downlaod this page as pdf