உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

அரசு முத்திரைச் சின்னத்தை மாற்ற விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை

 கடலூர்:

               தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தை ​(கோபுரச் சின்னம்)​ மாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்தது.

அக் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் மற்றும் நிர்வாகிகள் திங்கள்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அளித்த கோரிக்கை மனு:​ 

                         தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் தற்போது திருவில்லிபுத்தூர் கோயில் கோபுர சின்னம் இடம்பெற்று உள்ளது.​ இந்திய அரசியல் அமைப்பின்படி இந்தியா மதச் சார்பற்ற நாடு. இந்நிலையில் தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை அடையாளப்படுத்தும் வண்ணம் கோபுர சின்னம் இருந்து வருவது,​​ இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு முரணானது. எனவே தமிழக அரசு முத்திரைச் சின்னத்தில் கோபுர சின்னம் மாற்றப்பட்டு மதச்சார்பின்மையை உறுதிப்படுத்த வேண்டும்.​ அரசு முத்திரைச் சின்னத்தில் உலகப் பொதுமறையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட,​​ திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் உருவப்படத்தை பொறிக்கச் செய்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும். உலத் தமிழ் செம்மொழி மாநாடு முதல் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள சூழ்நிலையில்,​​ தமிழக அரசின் முத்திரைச் சின்னத்தில் திருவள்ளுவர் உருவம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை,​​ தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டுகிறேன் என்றும் மனுவில் திருமாறன் கோரியுள்ளார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior