பண்ருட்டி :
இடைநிலை கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத் திற்கு 139 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் பேசினார். பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. சி.இ.ஓ., அமுதவல்லி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராமன் வரவேற்றார். டி.எஸ்.பி., பிரசன்ன குமார் விழாவை துவக்கி வைத்தார். டி.இ.ஓ., க்கள் கணேசமூர்த்தி, குருநாதன், மண்டல உடற்கல்வி ஆய்வாளர் சாமிதுரை, சிறுகிராமம் ராஜாராம், பெற் றோர் ஆசிரியர் கழக தலைவர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் ராதாகிருஷ் ணன், ஒன்றிய கவுன்சிலர் அஸ்வத்ராமன் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மதுரை போக்குவரத்து டி.ஐ.ஜி., ராஜேந்திரன், பெல் கம்பெனி மேலாளர் ரவிச்சந்திரன், பேராசிரியர் கண்ணதாசன், முன்னாள் எம்.எல்.ஏ., பன்னீர்செல் வம், நேஷனல் கல்வியியல் கல்லூரி தாளாளர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 50 ஆண்டு கால முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பள்ளி பருவத்தின் அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் மேல்நிலைக் கல்வி இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது:
அனைத்து இடைநிலை கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு தமிழகத்திற்கு 139 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் பாகுபாடு உள்ளது. அரசு பள்ளிகளில் சாதி, மத, பேதமின்றி சமத்துவம் காணப்படும். படிப்பு, பணம் குறைவாக உள்ளவர்களை வெளியேற்றுவது தான் தனியார் பள்ளிக் கொள்கை. ஆனால், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் ஐ.பி.எஸ்., மற்றும் பல் வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தலைமையாசிரியர் கோரியபடி பொருளியல் பணியிட ஆசிரியர் இந்த வாரத்தில் நியமிக்கப்படுவர். மேலும், கல்வித் துறை சார்பில் இப்பள்ளிக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும். இவ்வாறு கார்மேகம் பேசினார்.
downlaod this page as pdf