கடலூர் :
கிராமப் புறங்களில் மருத்துவ தகுதி பெறாதவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். குறிஞ்சிப்பாடி ஒன்றிய கிராமங்களுக்கு கடந்த 10ம் தேதி அமைச்சர் பன்னீர்செல்வம் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றார்.
அப்போது அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில்:
'தமிழகத்தில் போலி மருந்துகள் தயாரித்தது தொடர்பாக 1991ம் ஆண்டு கண்டறியப்பட்டு வழக்குப் பதிந்து அப் போது இருந்த சட்டத்தின் படி குறைந்த தண்டனையும், அபராதமும் விதிக்கப் பட்டது. அதனால் இது தொடர்பாக எவ்வித கண்காணிப்பும் இல்லாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு போலி மருந்து தயாரிப்பவர்களை கண்டுபிடித்து போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்களிடம் ஆய்வு நடத்தி சம்பந்தப் பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் போலி மருந்துகள் குறித்து போலீஸ், மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதே போல் கிராமப்புறங்களில் மருத்துவ தகுதி பெறாதவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினார்.
downlaod this page as pdf