உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

இந்தியாவிற்கே முன்னோடி கருணாநிதி : எம்.எல்.ஏ., அய்யப்பன் புகழாரம்


கடலூர் : 

               கடலூரை பொறுத்த வரை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார். தி.மு.க., சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். பேச்சாளர் ஏகாம்பரம் சிறப்புரையாற்றினார். சேர்மன் தங்கராசு, பொரு ளாளர் தட்சணாமூர்த்தி, இளைஞரணி துணை அமைப்பாளர் சசிக்குமார், கவுன்சிலர்கள் இளங்கோவன், நவநீதம் சாமுவேல், கிளை நிர்வாகிகள் ஆதிபெருமாள், ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் எம்.எல். ஏ., அய்யப்பன் பேசியதாவது: 

                   முதல்வர் கருணாநிதியின் சிறந்த ஆட்சியில் நிதியமைச்சர் அன்பழகன் வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற அண்ணா துரையின் தாரக மந்திரத்தை நிறைவேற்றும் விதமாக முதல் வர் கருணாநிதி ஆட்சி செய்து வருகிறார். அந்த விதத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே ன்னோடியாக இருக்கிறார். 
                    கடலூரை பொறுத்த வரை பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். 10 கோடியே 50 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், 6 கோடியே 50 லட்சம் செலவில் எஸ்.பி., அலுவலக வளாகம், 2 கோடியில் வட்டார போக்குவரத்து அலுவலகம், 2 கோடியில் தாசில்தார் அலுவலகம், திருப்பாதிரிப்புலியூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு கோடியிலும், வண்டிப்பாளையம் பள்ளிக்கு ரூ. 50 லட்சம் செலவிலும் கட்டடம் கட்டும் பணி என கடலூர் நகருக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior