உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

நகராட்சியில் கூடுதல் கட்டட பணி : நிதி ஒதுக்குவதில் சிக்கல்

 நெல்லிக்குப்பம் : 

                        நெல்லிக்குப்பத்தில் 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டட பணி முடிக்கப்படாததால் கூடுதல் நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. முதல் தளம் பணிகள் துவங்கி தரைத் தளம் ஜல்லி போடப்பட்டது. இரண்டாம் தளம் ஜல்லி போட ஒரு மாதத்துக்கு முன் 'சென்டரிங்' அடிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பணிகளை நகராட்சி மண்டல பொறியாளர் பார்வையிட்டு அனுமதி தர வேண்டும். 15 நாட்களுக்கு முன் மண்டல பொறியாளர் அன்பழகன் பார்வையிட்டு சென்டரிங் முட்டுகள் சரியில்லை. அதை சரி செய்த பிறகே ஜல்லி போட வேண்டுமென கூறினார். உடனே முட்டுகள் சரி செய்யப்பட்டது. மீண்டும் மண்டல பொறியாளர் பார்வையிட்டு அனுமதி கொடுத் தால் தான் ஜல்லி போட வேண்டுமென நகராட்சி பொறியாளர் கூறியதால் ஜல்லி போடும் பணி நடைபெறவில்லை. மண்டல பொறியாளருக்கு தகவல் கொடுத்தும் அவர் பார்வையிட வரவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பணியை முடிக்க முடியவில்லை. கட்டட பணி முழுமையாக முடியாத நிலையில் நகராட்சி வருவாய் நிதியிலிருந்து அழகுபடுத்துதல், குளிர்சாதன வசதி செய்வதற்கு என 15 லட்சம் ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளது. அரசு மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் பணி முடியாததால் மேற் கொண்டு வேறு நிதியை ஒதுக்க முடியாது என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதிகாரிகளின் 'ஈகோ' பிரச் னையால் கட்டட பணி முடியாததால் நகராட்சிக்கு அரசு புதிய நிதிகள் ஒதுக்கவில்லை. தேர்தல் நெருங் கும் நிலையில் கூடுதலாக நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. உடனடியாக கட்டட பணியை முடித்து அதிக நிதி பெற அதிகாரிகளும், மக் கள் பிரதிநிதிகளும் முயற்சிக்க வேண்டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior