உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

குறுகிய பாலங்களால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதை! கண்டு கொள்வார்களா? நெடுஞ்சாலைத்துறையினர்


சிதம்பரம்  :  

                  சிதம்பரம் - சீர்காழி மெயின் ரோட்டில் பாலம் குறுகியதாகவும்,  உடைந்த ஆபத்தான நிலையில் இருப்பதாலும் விபத்துக்கள் நடப்பதும், போக்குவரத்து மணிக்கணக்கில் ஸ்தம்பிப்பதும் தொடர்கதையாக உள்ளது.

                     சிதம்பரம் - சீர்காழி சாலை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் மிக முக்கிய சாலையாக உள்ளது. ஆனால் இச்சாலை ஆங்காங்கே வளைவுகள், இடையிடையே குறுகலான பாலங்கள் என போக் குவரத்திற்கு இடையூறாக ள் ளது. அதிவிரைவு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டும் குறிப் பிட்ட வேகத்திற்கு மேல் செல்ல முடிவதில்லை. உதாரணமாக சிதம்பரம் மெயின் ரோட்டில் எம்.கே., தோட்டம் அருகே மழை நீர் வடிகால் பாலம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் இப்பாலம் வழியாக ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். சில நேரங்களில் ஒரே நேரத்தில் போட்டி, போட்டுக் கொண்டு பாலத்தில் வானகங்கள் செல்வதால் பாலத்தின் நடுவே சிக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம் பித்து விடுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது பாலத்தில் விபத் துகளில் சிக்குகின்றனர். ஒவ் வொரு நாளும் அப்பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்துகளை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.        
                  இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பாலத்தில் மோதி பக்கவாட்டு தடுப்புக் கட்டைகளை உடைத்து விடுகின்றனர். அடிக்கடி பக்கவாட்டு சுவர் இடிந்து விடுவதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை ஏற்படுகிறது. பாலத்தை அகலப்படுத்தி கட்ட நெடுஞ்சாலைத்துறைக்கு பல் வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அடிக்கடி பக்கவாட்டு சுவரை மட்டும் கட்டி வருவதையே வேலையாக கொண்டுள்ளனர். மேலும், அதே சாலையில் அம் மாபேட்டை வளைவில் உள்ள பாசன வாய்க்கால் பாலம் உடைந்து எந்த நேரத்திலும் பாதிப்பு ஏற்படும் என்ற ஆபத் தான நிலை உள்ளது. ஆபத்தான வளைவில் அமைந்துள்ள இப்பாலத்தில் அடிக்கடி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதும், இரவு நேரங்களில் பாலத்தை உடைத்துக்கொண்டு வாய்க்காலில் வாகனங்கள் கவிழ்ந்து விடுவதும் வாடிக்கையாகி விட்டது. 
                   கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சிலிண்டருடன் பாலத்தை உடைத்துக் கொண்டு தலைக் குப்புற கவிழ்ந்தது. இந்த பாலத் தில் விபத்து ஏற்பட்டால் சிதம்பரம்- சீர்காழி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும்  வாகனங்கள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலையும், அல்லது சேத்தியாத்தோப்பு வழியாக போக்குவரத்தை திருப்பி விடப்படும் நிலையும் ஏற்படுகிறது. இந்த இரு பாலங்களையும் இதுவரை சீர் செய்யவோ, மாற்று ஏற்பாடுகள் செய்யவோ நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. புறவழிச்சாலை பணியை காரணம் காட்டி வருகின்றனர். புறவழிச்சாலை வந்தாலும்கூட அப்பகுதி கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளுக்கு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் இந்த இரு பாலங்களுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior