பண்ருட்டி :
எம்.எட்., தேர்வில் பண்ருட்டி கல்வியியல் கல்லூரி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லையில் உள்ள நேஷனல் கல்வியியல் கல்லூரியில் 2008-2009ம் ஆண்டில் எம்.எட்., இறுதியாண்டு தேர்வில் மாணவி தமிழ் செல்வி கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். சென்னையில் நடந்த தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழக தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாணவி தமிழ்செல்விக்கு பட்டம் மற்றும் பதக்கம் வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி தமிழ் செல்வியை நெய்வேலி கல்வி அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர், செயலாளர் நடராஜன், பொருளாளர் தங்கதுரை, இயக்குனர்கள் ஜெயவெங்கட்ராமன், சுதாராமராசு, கல்லூரி முதல்வர் அஷ்ரப்புல்லா ஆகியோர் வாழ்த்தினர்.
downlaod this page as pdf