உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 13, 2010

நிலுவை தொகை பெற்றுத்தர வலியுறுத்தி பால் உற்பத்தியாளர் சங்கம் கலெக்டரிடம் மனு


சிறுபாக்கம் : 

              பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை 2 கோடியே 25 லட்சம் ரூபாயை பெற்றுத் தரக் கோரி கலெக் டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் நல சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் சீத்தாராமனை  சந்தித்து அளித்துள்ள மனு:

                   கடலூர் மாவட்டத்தில் 350 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் துவங்கப்பட்டு, தற்போது 260 சங்கங் கள் மட்டுமே பெயரளவில் செயல் பட்டு வருகிறது. நல்லூர், மங்களூர் மற்றும் விருத்தாசலம் ஒன்றியங்களில்  80 சங்கங்கள் நல்ல நிலையில் செயல்பட்டு வருகிறது. இச்சங்கங்களில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. உற்பத்தியாகும் பால் கடலூர் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறங்களில் 22 ஆயிரம் லிட்டர் விற்பனையாகிறது. மீதமுள்ள பால் மட்டுமே மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்திற்கு செல்கிறது. இவ்வாறு வழங்கப்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கத்திற்கு விழுப்புரம் ஒன்றியத்திலிருந்து  50 நாட்களுக்கான தொகை 2 கோடியே 25 லட்சம் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை.இதனால் சங்கங்கள் அனைத்தும் மூடப்படும் நிலையில் உள்ளது. விழுப்புரம் ஒன்றிய நிர்வாக இயக்குநரிடம் பலமுறை நேரில் எடுத்துரைத் தும், உண்ணாவிரதம் நடத்தியும் இதுவரை நிலுவை தொகை வழங்கவில்லை. விழுப்புரம் மாவட்ட கலெக் டரிடம் முறையிட்டும் அவருக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்கள் பணம் பட்டுவாடா செய் துள்ளதாக தவறான தகவல் அளித்து வருகின்றனர்.இதுபோன்ற நிலையில் 10 ஆயிரம் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதுடன், தனியார் பால் வியாபாரிகளை நோக்கிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆவின் நிர்வாகம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பால் வளத்துறை கமிஷனர், கால்ந டை பராமரிப்பு செயலர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு கடலூர் மாவட்டத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க பரிந் துரை செய்ய வேண்டும். மேலும், கடலூர் மாவட்டத்திற்கு தயாக ஒன்றியம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள் ளது.இதனைத் தொடர்ந்து  கலெக்டர் சீத்தாராமன், விழுப்புரம் கலெக்டர் மற்றும் பால்வள ஒன்றிய நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் மொபைல் போனில் பேசினார். பின்னர் உடனடியாக பால் பாக்கி தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக மனுதாரர்களிடம் உறுதியளித்தார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior