கடலூர்:
கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயில் வியாழக்கிழமை மாலை 7-25க்கு திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் வந்தது. வண்டி புறப்பட்டுச் சென்றதும் ரயில்வே கேட்டைத் திறக்க முடியாமல் அதில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சுமார் 30 நிமிடம் அந்த மார்க்கத்தில் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் லாரன்ஸ் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டதால், ரயில்வே கேட் திறந்த பிறகும் நெரில் காரணமாக பொதுமக்கள் அந்தப் பாதையை கடக்க, 20 நிமிடத்துக்கு மேல் ஆயிற்று. பஸ் நிலையத்துக்கு உள்ளேயும் பஸ்கள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர். போலீஸôர் வந்து பெரிதும் போராடி நிலைமையை சீராக்க வேண்டியது இருந்தது. காலையில் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த ரயில் நிலையத்தைக் கடக்கும்போதும் லாரன்ஸ் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே இங்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக