உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 30, 2010

அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்றால் வெளிநடப்பு

பண்ருட்டி: 

                 பண்ருட்டி அடுத்த ஒன்றியக் குழுக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்றால் வெளிநடப்பு செய்யப்போவதாக ஒன்றியக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறினர். பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தின் மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவர் கெüரிபாண்டியன் தலைமையில்,​​ துணைத் தலைவர் எம்.சம்மந்தம் முன்னிலையில் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:​​

வீரமணி:​​ 

                   பொறியாளர் இல்லாமல் ஏன் கூட்டத்தை நடத்துகின்றீர்கள்.

செல்வராஜ்: ​​ 

                பொறியாளருக்கு கூட்டம் குறித்த தபால் அனுப்பியுள்ளீர்களா.​ கிராம பகுதியில் தண்ணீர் வசதி செய்வது குறித்து அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.​ இதுவரை தலைவருக்கோ,​​ உறுப்பினர்களுக்கோ தெரியப்படுத்தவில்லை.

எம்.சம்மந்தம்:​​ 

                  கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்துகொள்வதில்லை.​ தொடர்ந்து இந்நிலை நீடித்தால் வெளிநடப்பு செய்வோம்.​ அலுவலக வளாகத்தில் உள்ள திருமண மண்டபம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.​ ​

சுப்பிரமணியன் ​(பிடிஓ):​​ 

                சில வேலைகளை வெள்ளிக்கிழமை முடிக்க வேண்டியுள்ளதால் பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்.

ராமு: ​​ 

               மைக் வசதி இல்லாததால் கூட்டத்தில் பேசுவது சரியாக கேட்கவில்லை,​​ 4 ஆண்டுகளாக மைக் வாங்கி வைக்க கோரிக்கை வைத்தும் ஏன் நிறைவேற்றவில்லை.​ அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

சக்கரவர்த்தி:​​ 

                கூட்டம் தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும்,​​ முடியும் போது தேசிய கீதமும் இசைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கடந்த 4 வருடங்களாக கூறியும் இதுவரை நிறைவேற்றவில்லை

 சுப்பிரமணியன் ​(பிடிஓ):​​ 

            மைக் மற்றும் தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்யப்படும்.​ பொது நிதியில் இருந்து குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படும்.

ரேவதி:​​ 

                 எங்கள் பகுதிக்கு அமரர் ஊர்தி ​(தள்ளுவண்டி)​ வேண்டும்.சுப்பிரமணியன் 

​(பிடிஓ):​​ 

                     அமரர் ஊர்தி எந்த பகுதிக்கு அளிக்கப்பட்டுள்ளது எந்த பகுதிக்கு கொடுக்க வேண்டும் என கணக்கெடுத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அன்பழகன்:​​ 

                அலுவலக வளாகத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும்.​ மேலும் குரங்குத் தொல்லை அதிகம் உள்ளதால் அலுவலர்களும்,​​ பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.​ குரங்குகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனுவாசன்: 

              மாளிகம்பட்டு-​ எஸ்.கே.பாளையம் சாலையில் மின் விளக்கு இல்லாததால் பொது மக்களும்,​​ பள்ளி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.​ எனவே மேற்கண்ட சாலையில் மின் விளக்கு அமைக்க வேண்டும்.

ரகுமான்:​​ 

             அலுவல் பணியாக அலுவலகத்திற்கு வரும் உறுப்பினர்கள் உட்கார வசதி இல்லாததால் நிற்க வேண்டியுள்ளது.

சுப்பிரமணியன் ​(பிடிஓ):​​ 

              இவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ​(கி.ஊ)​ தமிழரசி,​​ சுசீலா,​​ ராஜேஸ்வரி,​​ கல்யாணி உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior