விருத்தாசலம்:
கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டுக்கு கடலூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டனர். கோவையில் ஜூன் 23 முதல் 27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு பாதுகாப்புக்காக தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் இருந்தும் 10,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதன்படி கடலூர் மாவட்ட போலீசார் விருத்தாசலத்தில் இருந்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் 14 ஆய்வாளர்கள், 50 உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் பயிற்சி காவலர்கள் உள்பட 520 போலீஸôர் மாநாட்டு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பட்டனர். முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஷ் பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை காவலர்களுக்கு வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக