உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

கடலூர் மாவட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக சார்பில் 4 பேர் போட்டியின்றித் தேர்வு

கடலூர்:

               கடலூர் மாவட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 4 பேர் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு  22-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசிநாள். ஒரு நகராட்சி உறுப்பினர் பதவி, ஒரு பேரூராட்சி உறுப்பினர் பதவி உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு 100 பேர் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். இவர்களில் 35 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். 40 பேர் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். 

                சிதம்பரம் நகராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தியாகு என்ற தியாகராஜன் (திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), புவனகிரி போரூராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பி.ஜி.கே.முத்து என்ற கோவிந்தசாமி (திமுக), அண்ணா கிராமம் ஒன்றியம் 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பழநியம்மாள் (திமுக), மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி 14வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரா.கோவிந்தசாமி (திமுக) ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கடலூர் மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல்வேறு பதவிகளுக்கும் 36 பேர் போட்டியின்றித் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். இறுதியாக 2 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள் மற்றும் 6 உறுப்பினர் பதவிகளுக்கு 19 பேர் போட்டியிடுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior