உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

திட்டக்குடி வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி தாமதம்! மாற்று வழி ஏற்படுத்த விவசாயிகள் கோரிக்கை

திட்டக்குடி: 

              திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரைகள் சீரமைப்பு பணி பருவமழைக்கு முன்னதாக நிறைவடையுமா என விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். 

               திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள 2580 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டு வெலிங்டன் ஏரி மூலம் திட்டக்குடி, விருத் தாசலம் தாலுகாக்களை சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களும், 15 ஆயிரம் விவசாய தொழிலாளர்களும், பயனடைந்து வந்தனர். 

                    நீர் வரத்து காரணமாக ஏரி தூர்ந்ததால் நீர் பிடிப்பு 1485.72 மில்லியன் கன அடியாக குறைந்தது. கடந்த 2008 ஜனவரி 3ம் தேதி வெலிங்டன் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்ட அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னு, ஏரியின் கொள்ளளவை அதிகப்படுத்திட தொழில்நுட்ப நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் கரைகள் பலப்படுத்தி கான்கிரீட் தளத்துடன் கூடிய திருகு ஷட்டர்கள் அமைத்து , பாசன வாய்க்கால்கள் சீரமைக்கப்பட உள்ளது என்றார். அதன்படி பாசன ஏரிகள் மற்றும் பாசன வாய்க்கால் களை சீரமைக்க மாவட்ட பொது நிதியிலிருந்து 1.40 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டது.

               இந்நிலையில் தமிழக அரசு வெலிங்க்டன் ஏரியில் வலுவிழந்த 800 மீட்டர் தூர் கரையை பலப்படுத்தி சீரமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதனையொட்டி கரை சீரமைப்பு பணிக்கு கடந்த 2009 மே மாதம் 5ம் தேதி பூமி பூஜை போடப்பட் டது. கரை சீரமைப்பு பணிக்காக 18 மாதங்கள் ஏரியில் நீர் பிடிப்பு நிறுத் தப்படும் என அறிவிக் கப்பட்டது. மேலும் ஏரியில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி ஏரியின் உட்புறம் தற்காலிக தடுப்பு சுவரான "காப்பர் டேம்' ( சவுக்கு மரங்கள், மணல் மூட்டைகள் அடுக்கிய) அமைக்கப் பட்டது. இதற்காக கரையின் வெளிப்பகுதியில் அதிகளவு மணல் தோண்டியதால் 400 மீட்டர் தூரத் திற்கு கரை உள்வாங்கியது. இதனால் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை உருவானது.

                 இதுகுறித்து எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை முதல்வரிடம் முறையிட்டதை தொடர்ந்து பொதுப் பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ஜெயராமன் தலைமையிலான சிறப்புக் குழுவினர் ஏரியின் கரைப் பகுதிகளை ஆய்வு செய்த பின் பணிகள் தொடர்ந்தன.இந்நிலையில் கரையை பலப்படுத்த கீழ்ச்செருவாய், ஆக்கனூர் உள் ளிட்ட பகுதிகளிலிருந்து களிமண் எடுத்து வருவதாலும், சீரமைப்பு தூரம் 83 மீட்டர் அதிகரித்துள்ளதாலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒப்பந்ததாரர் சில வாரங்களுக்கு முன் பணியை நிறுத் தினார்.அதிருப்தியடைந்த விவசாயிகள் இப் பிரச்னை குறித்து அரசின் கவனத் திற்கு கொண்டு சென்றனர். ஏரியை பார் வையிட்ட பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளர் ராமசுந்தரம், கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை துவங்க சில மாதங்களே உள்ளதால் கரைப்பகுதி முழுமையாக சீரமைத்து நீர்ப்பிடிப்பு செய்யப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
 
                தற்போது கரையின் உட்புறம் கருங்கல் பதிக் கும் பணி 300 மீட்டருக்கும், மேல்புறம் 8.5 அடிக்கு களிமண் கொட்டி கரையை பலப்படுத்தும் பணியும் மீதமுள்ளது. இப் பணிகள் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், விவசாயிகள் ஏற்க மறுக்கின்றனர். இரண்டு ஆண்டாக ஏரியில் தண்ணீர் இல்லாததால் நிலங்களில் பயிரிட முடியாமல் பாதிக்கப் பட்ட இப்பகுதி விவசாயிகள், இந்த ஆண்டும் நீர்ப்பிடிப்பு செய்ய முடியாத நிலை ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர். எனவே மாற்று வழியாக விவசாய நிலங்களில் மின்இணைப்பு கோரி மனு அளித்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை, பம்பு செட்டுகள் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண் டும். நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச "ஆயில் எஞ்சின்' பயன்படுத்த நினைக்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வங்கிகள் மூலம் வழங்கிட மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந் தரை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

சொன்னதை மறந்த எம்.எல்.ஏ.,!

               வெலிங்டன் ஏரிக்கரை சீரமைப்பு பணி பல்வேறு காரணங்களால் தடைபட்டு மீண்டும் நடைபெற்று வருகிறது. இதில் திருப்தியடையாத விவசாயிகள், பாசன சங்கத் தலைவர்கள் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகையிடம் முறையிட்டனர். அதன்பேரில் கடந்த மாதம் ஏரிக்கரை சீரமைப்பு பணியை நேரில் பார்வையிட்ட எம்.எல்.ஏ., பணியை ஜூலை 8ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இல்லை எனில் திட்டக்குடி பகுதி விவசாயிகளை திரட்டி, ஏரி சீரமைப்பு பணியை டெண்டர் எடுத்துள்ள காண்ட்ராக்டர் வீடு நோக்கி நடைபயணம் நடத்தப்படும் என எச்சரித்திருந்தார். அவர் விடுத்த காலக்கெடு முடிந்து ஓரு வாரமாகியும் பணிகள் இன்னமும் முடிந்தபாடில்லை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior