கடலூர்:
பள்ளி, கல்லூரி வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த, தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அனைத்துப் பள்ளி, கல்லூரி வாகனங்களிலும் அவற்றில் பயணம் செய்யும் மானவர்களின் நலன் கருதி, வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதன்படி 10-12-2010-க்குள் அனைத்து கல்வி நிலைய வாகனங்களிலும் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும். அதிகபட்ச வேகமாக 50 கி.மீ. மட்டுமே இருக்கும் வகையில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டது என்று, தமிழிலும் ஆங்கிலத்திலும் வாகனத்தின் முன் பின் கண்ணாடிகளில் எழுதப்பட வேண்டும்.புதிதாக பதிவு செய்யும் கல்வி நிலைய வாகனங்களில் கட்டாயம் இக்கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். கல்வி நிலையங்களுக்கு பயணிக்கும் மற்ற டாக்ஸி, மேக்ஸிகேப், ஆம்னிபஸ் போன்ற வாகனங்களிலும் இக்கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.போக்குவரத்துக் கருவி பொருத்தப்பட்டு இருப்பின் போக்குவரத்து அலுவலகத்தில் அவற்றில் சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் அரசாணை எண் 563 உள்துறை நாள் 10-6-2010 ல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக