உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 15, 2010

சிதம்பரம் நடராஜர் கோவில் நுழைவு போராட்டம் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 473 பேர் கைது

சிதம்பரம்:

             சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வாயில் நுழைவு போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட மா.கம்யூ., எம்.எல்.ஏ., மகேந்திரன் உள் ளிட்ட 473 பேர் கைது செய்யப் பட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற தெற்கு வாயில் அடைக்கப்பட்டு கிடப் பதை கண்டித்து, தெற்கு வாயில் வழியாக கோவிலுக்குள் செல்லும் போராட்டம் நடத்தப் போவதாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அறிவித்தனர்.

              அதன்படி நேற்று சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு அருகில் இருந்து மாநில தலைவர் சம்பத் தலைமையில் பெரம்பூர் எம்.எல்.ஏ., மகேந்திரன், விவசாயிகள் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், மா.கம்யூ., மாநிலக் குழு உறுப்பினர்கள் தனசேகரன், மூசா, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு மாவட்ட அமைப்பாளர் துரைராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி ஸ்ரீரங்கன் பிரகாஷ், மனித உரிமை கட்சி விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

              அவர்களை நடராஜர் கோவில் தெற்கு வாயிலில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடையை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் வாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.தீர்வு ஏற்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென தெற்கு வீதியில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்ததை தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட 57 பெண்கள் உள்ளிட்ட 473 பேரை போலீசார் கைது செய்து, போக்குவரத்தை சரி செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior