கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இரு ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் கிளாவடி நத்தம், தட்டாம்பாளையம் ஆகிய இரு ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் குமார், ஊரக வேலை உறுதித்திட்டத்தில் போலியாக (சிறையில் இருப்பவர்கள், விபத்தில் இறந்தவர்கள், குற்றவாளிகளை ஜாமீனில் எடுக்கச் சென்றவர்கள் போன்றோர்) பெயர் பட்டியலில் சேர்த்து போலி ஆவணம் தயாரித்து பணம் எடுத்துக் கொண்டுள்ளார். அரசின் நிதியைக் கையாடல் செய்துள்ளார். ஏழை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான வேலையை தட்டிப்பறித்து உள்ளார். அதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
தட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் வேணுகோபால், ஊராட்சி கணக்குகளை சரியாகப் பராமரிக்கவில்லை. பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அரசு நிதியை அரசாணைக்கு மாறாக செலவு செய்துள்ளார். ஊராட்சி நிதியைக் கையாடல் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. வேணுகோபால் அரசுக்கு மேல்முறையீடு செய்தார். அந்த விசாரணையிலும் முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டன. அவரைப் பதவிநீக்கம் செய்த உத்தரவை, அரசு உறுதி செய்து உள்ளது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக