சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பில் தரமற்ற விதை நெல் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க., மாவட்ட விவசாய பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க., விவசாய பிரிவு இணை செயலாளர் அப்பாதுரை, கலெக்டர் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:
சேத்தியாத்தோப்பில் விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யும் தனியார் கடைகளில் அரசு சான்றிதழ் பெறாத மற்றும் தரமற்ற விதைகள் கவர்ச்சியான கவர்களில் பேக் செய்து விற்பனை செய்து வருகின்றனர். ஒரு சில கடை உரிமையாளர்கள் வேளாண்மைத் துறை அதிகாரிகளின் துணையுடன் அவர்களிடமிருந்து விதைகளைப் பெற்று விவசாயிகளிடம் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். அதேப் போன்று பூச்சிக் கொல்லி மருந்துகளில் காலாவதியான மருந்துகள், போலி மருந்துகளை விவசாயிகளிடம் கொடுத்து ஏமாற்றி வருகின்றனர்.
இதனால் அப்பாவி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் கை தெளிப் பான் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங் கப்படும் பொருள்கள் யாவும் இந்த தனியார் மருந்து கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இப்பிரச்னையில் உரிய சோதனைகளை மேற்கொண்டு போலி விதை மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்வோர் மீது உரிய விசாரணை செய்து அவர்களின் உரிமத்தை ரத்து செய்திடவும் நடவடிக்கை எடுத்து இப்பகுதி அப்பாவி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக