நெய்வேலி:
வடக்குத்து ஊராட்சியில் அரசு சார்பில் புதிய ஆரம்பப் பள்ளி தொடங் கப்பட்டதையடுத்து கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட வடக்குத்து கிராமத்தின் கிழக்குப் பகுதியில் பள்ளி துவங்கப்பட வேண்டுமென அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வத்தின் பரிந்துரையின் பேரில் வடக்குத்து கிராமத்தின் கிழக்கு பகுதியில் புதிய ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக் கென சொந்தமாக கட்டடம் அரசு செலவில் கட்டப்பட உள்ளது. அதுவரை பள்ளிக்கூடம் வாடகை கட்டடத்தில் செயல்பட தொடங்கியுள்ளது. அதுபோலவே வடக்குத்தை அடுத்துள்ள சந்தைவெளிப்பேட்டையில் இயங்கி வந்த ஆரம்பப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கையினால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக