சிதம்பரம் அருகே சீர்காழி சாலையில் வெள்ளந்தாங்கி அம்மன் ஆலயம் அருகே உள்ள குறுகிய பாலம்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே சீர்காழி ரோட்டில் உள்ள பாலம் குறுகியதாக இருப்பதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
சிதம்பரம் - சீர்காழி சாலையில் டி.எஸ்.பி. அலுவலகம் அருகே வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் அருகில் உள்ள வாய்க்கால் மீது ஒரு குறுகிய பாலம் உள்ளது. வெள்ளக் காலங்களில் வீராணம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் செல்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் இப் பாலம் கட்டப்பட்டது. எனினும் இதுநாள் வரை அப் பாலம் விரிவாக்கப்படவில்லை.
சென்னையிலிருந்து சிதம்பரம் வழியாக சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச். 45ஏ) இப்பாலம் அமைந்துள்ளது. அதனால் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ளது. இக் குறுகிய பாலத்தின் மீது ஒரே நேரத்தில் ஒரு பஸ்தான் செல்ல முடியும். இதனால் இரவு நேரங்களில் இக் குறுகிய பாலத்தில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.÷தேசிய நெடுஞ்சாலைத் துறையோ அல்லது தமிழக அரசோ இப்பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக