உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

சுனாமி பாதித்த பகுதிகளில் ரூ.17.61 கோடியில் மேம்பாட்டு பணிகள் 40 ஆயிரம் பேர் பயன்பெற்றனர்

கடலூர்: 

             கடலூர் மாவட்டத்தில் சுனாமி பாதித்த பகுதிகளில் மக்களின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்த  ரூ.17.61 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 40 ஆயிரம் மகளிர் பயன் பெற்றுள்ளனர்.  

                       கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் ஏற்பட்ட பேரழிவு  மக்கள் மனதில்  நீங்காத சுவடாக அமைந்துள்ளது.  கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டத்தில் 1 லட்சம் பேர் சுனாமியால் பாதிக்கப்பட்டனர். 610 பேர் இறந்தனர்.  18 பேர் காணாமல் போயினர். கடற்கரை கிராமங்களில் அமைந்திருந்த 4000 ஆயிரம் வீடுகள், குடிசைகள் சேதமடைந் தது. மீனவர்களின் தொழில் ஆதாரமான 7000 கட்டுமரங்கள், 1200 இயங்திர படகுகள், 29 விசைப்படகுகள் சேதமடைந்தது. 5,000 மீன் வலைகள் நாசமாகியது. 2 ஆயிரம் கால்நடைகள் செத்து மிதந்தன. 415 ஹெக்டர் வேளாண் பயிர்களும், 193 ஹெக்டர் தோட்டக்கலை பயிர்களும் கடல்நீர் புகுந்ததால் வீணாகியது. சுனாமியின் தாண்டவத்தால் மீனவ மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தனர். இந்நிலையில் மத்திய& மாநில அரசுகள் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மீட்பு, நிவாரண புனரமைப்பு பணிகளை மேற்கொண் டன. இதன் எதிரொலியாக மீனவ கிராமங்களில் இயல்பு நிலை திரும்பியது.  

                               சுனாமியால் பாதிக்கப்பட்ட ஊரக பகுதிகளில் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை, மீன்வள துறை, வேளாண்மை துறை, கால்நடை துறை ஆகிய துறைகளில் உள்ள மாவட்ட அலுவலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பு, ஊராட்சி பிரதிநிதிகள் அடங்கிய மாவட்ட அளவிலான திட்ட செயல்பாடு ஆலோ சனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சி யர் தலைமையில் செயல்படும் இக்குழு மூலம் ரூ.17.61 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் 3962 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியும், 332 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடன் உதவியும், 2197 ஊனமுற்ற நபர்களுக்கு வாழ்வாதார உதவியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் மகளிர் நேரிடையாக பயன் அடைந்துள்ளனர்.
 

                      கல்வி உதவி தொகை: சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவ& மாணவியருக்கு 2008&09ம் ஆண்டிற்கு ரூ.2700 வீதம் 7649 மாணவ& மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து, 52 ஆயிரத்து 300 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று 17,3329 குடும்பங்களுக்கு தேசிய காப்பீடு திட்டத்தில் மருத்து அடை யாள அட்டை வழங்கப்பட்டு இதில் 976 குடும்ப அட்டைதாரர்கள் ரூ.45 லட்சம் மருத்து உதவி தொகை பெற்று பயன் பெற்றுள்ளனர். பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் கடற்கரை கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் அலுவலகம் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior