உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

திருக்கோவிலூர் அருகே புதையலுடன் தலைமறைவான சூளை தொழிலாளி கைது போலீசார் அதிரடி

திருக்கோவிலூர்:

                திருக்கோவிலூர் அருகே புதையலுடன் தலைமறைவான சூளை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

                திருக்கோவிலூர் அருகே கழுமரம் கோட்டகத்தை சேர்ந்த சரவணன் என்பவரது நிலத்தில் அமைத்திருந்த செங்கல் சூளையில் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த சக்கரை மகன் ராதாகிருஷ்ணன்(30)  வேலைபார்த்து வந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன் மண்ணில் புதைந்தவாறு ராதாகிருஷ்ணனுக்கு ஒரு புதையல் கிடைத்தது. அதனை யாருக்கும் தெரியாமல் திருவண்ணாமலையில் விற்க முயற்சி செய்த போது அந்த புதையலில் தங்கம் இருப்பதும் அதன்  மதிப்பு சுமார் 30 ஆயிரம் இருக்கும் என்பதை அறிந்து கொண்டார். பின்னர் அந்த புதையல் கூடுதல் விலை இருக்கும் என்று கருதிய ராதாகிருஷ்ணன் தனது வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கும் போது இதுபற்றிய விஷயம் அக்கம்பக்கத்தாருக்கு தெரிந்தது. அப்பகுதியை சேர்ந்த சிலர் வருவாய்த்துறையினருக்கு  தெரிவித்தனர். அப்போதிருந்த கோட்டாட்சியர் கோதண்டராமகுப்தா, தாசில்தார் சண்முகம் ஆகியோர் கழுமரம், ஆலம்பாடி கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

                  ராதாகிருஷ்ணனுக்கு புதையல் கிடைத்ததை உறுதி செய்தனர்.  ஆனால் விசாரணையின்  போது ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் தலைமறைவானார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி மாவட்ட வருவாய் அலுவலர் கதிரவன் உத்தரவின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க புதையலை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior