திட்டக்குடி:
திட்டக்குடி பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள், மாதந்திர கூட்டத்திற்கான பொருள், திருக்குளம் தூர்வாருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து நேற்று கவுன்சிலர்கள், மன்ற தலைவர் மன்னன் தலை மையில் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
துணை தலைவர் கமலிபரமகுரு, விடுதலை சிறுத்தைகள் கவுன்சிலர் ராஜாஅலெக்சாண்டர், கவுன் சிலர்கள் செந்தில், செந்தில்குமார், ராதாகனக சபை, பழனியம்மாள்பாஸ்கர், செல்விதாமோ தரன், ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்பொழுது தாசில் தார் ஜெயராமன் தலைமையில் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் பிச்சபிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கூட் டம் நடந்து கொண்டு இருந்த மன்ற வளாகத்தில் வந்து சோதனை மேற்கொண்டனர். அதனை பார்த்த கவுன்சிலர்கள் திடீர் விசிட் குறித்து கேட்டனர். அதற்கு விடுமுறை தினத்தில் என்ன செய்கின்றீர்கள் என பார்க்க வந்தோம் என கூறினர். இதில் சந்தேகம் அடைந்த கவுன்சிலர்கள் துருவிதுருவி கேட்டதற்கு பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிலர் குடித்து கொண்டு இருப்பதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. இது குறித்து சோதனையிட உத்தரவு வந்ததால் வந்தோம் என கூறினர். பொது பிரச்னை குறித்து விவாதம் செய்து கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு பிரச்னையா என அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்கள் பொய் வதந்தியை பரப்பிய நபர் யாராக இருக்கும் என தங்களுக்குள் விவாதம் செய்தனர். மன்ற கூடத்தில் வருவாய்த்துறையினர் சோதனை செய்த சம்பவம் திட்டக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக