பண்ருட்டி:
மன வளர்ச்சிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்கும் விழா, பண்ருட்டி வட்டம் பூங்குணம் வட்டார வள மைய வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. ÷இவ் விழாவில் கடலூர் ஓயாசீஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்போடு, மைய அரசின் தேசிய அறக்கட்டளை மூலம் மன வளர்ச்சிக் குறைபாடு, மூளை முடக்கு வாதம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்ட 30 குழந்தைககளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்புடைய இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய மேற்பார்வையாளர் தங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், பூங்கணம் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தனர். தேசிய அறக்கட்டளையின் மாவட்ட பிரதிநிதி ஓயாசீஸ் செயலர் டாக்டர் தவராஜ், திட்டத்தை செயல்படுத்தும் ஐஇபிசி செயலர் முருகானந்தம் ஆகியோர் விழிப்புணர்வு சார்ந்த ஆலோசனைகளையும், இலவச மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையையும் வழங்கினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக