உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைசீரமைப்பு பணி விரைவில் துவக்கம்

கடலூர் :

                        விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ் சாலை திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 25.20 கி.மீ., சாலை 10.87 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.கடலூர் கலெக்டர் சீத்தாராமன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் கும்பகோணம் வழியாக, தஞ்சாவூர் வரையிலான 165 கி.மீ., நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்ட சாலை, "45சி' தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப் பட்டுள்ளது. இது, விக்கிரவாண்டியிலிருந்து (150/4 தேசிய நெடுஞ்சாலை) கடலூர் மற்றும் அரியலூர் வழியாக, தஞ்சாவூர் வரை (80/4 என்.எச்) அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இதில், கடலூர் மாவட்டத்தில் 25.20 கி.மீ., சாலை 2008-09ம் ஆண்டிற்கு 10.87 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு, அரசால் ஒப்புதல் அளிக் கப்பட்டு, விரைவில் பழுதடைந்த சாலையை சரி செய்து அகலப்படுத்தப்பட உள்ளது. இச்சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக அரசால் 2.80 கோடி ரூபாய்க்கான திட்ட மதிப்பீடு ஒப்புதல் அளித்து பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலையில் சில பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை யின் தரத்தில் இல்லாததால், இந்த பாலங்களை 12 மீட்டர் அகலத்தில் அமைக்க, ஒப்பந்த புள்ளிகள் 17ம் தேதி கோரப்பட்டுள்ளன. ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்தவுடன், பணிகள் விரைவில் துவங்கும்.

                        தற்போது, வடலூர் அடுத்த கண்ணுத்தோப்பு பாலத்தில், பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் 22ம் தேதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் தஞ்சாவூர் திட்ட இயக்குனர் தேசிய நெடுஞ் சாலைத்துறை "அத்தாரிட்டி ஆப் இந்தியா'விடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior