உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

சுனாமி 5ம் ஆண்டு இன்று நினைவு நாள்

கடலூர் :

                சுனாமி ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடலூரில் அமைதி ஊர்வலம் நடக்கிறது.

                          கடந்த 2004ம் ஆண்டு டிச. 26ம் தேதி, இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக உருவான சுனாமி பேரலைகள் இந்தோனேசியா, மலேஷியா, தாய்லாந்து, இலங்கை, உட்பட பல நாடுகளின் கடலோர பகுதிகளில் கோரத்தாண்டவம் ஆடியது. அந்தமான் தீவுகள், தமிழகத்தில் நாகை மற்றும் கடலூர் மாவட்டங்கள் சுனாமியால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டன.

                         இந்த சுனாமியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தமிழகத்தில் மட்டும் 8,018 பேர் இறந்தனர். ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் 610 பேர் இறந்தனர்.பெரும் சோகத்தை ஏற்படுத்திய சுனாமி ஏற்பட்டு இன்றுடன் ஐந்தாண்டு நிறைவு பெருகிறது. அதையொட்டி, கடலூர் குழந்தைகள் காப்பகம், தேவனாம்பட்டினம், பில்லுமேடு கிராமம், பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில் மாதாகோவில் தெரு, சின்னூர், சி.புதுப்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை பகுதிகளில் அமைதி ஊர்வலம் மற்றும் நினைவு தூண்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.சுனாமியின்போது ஊட்டியில் இருந்து கடலூர் சில்வர் பீச்சுக்கு வந்த தம்பதிகள்-சபியுல்லா, பர்வீன், இவர்களது குழந்தைகள் தன்வீர்(7), தெல்கா(3), மற்றும் எட்டு மாத கை குழந்தை பிலால் ஆகியோர் சிக்கினர். இதில் சபியுல்லா, பர்வீன், பிலால் பலியாயினர். தன்வீர் மட்டும் தப்பினார். அப்போது, எஸ்.பி., முகாம் அலுவலகம் அருகே காருடன் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் தெல்காவை எஸ்.பி., பன்னீர்செல்வம் காப்பாற்றி அருகிலிருந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு, தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டார். தெல்காவை வாங்கிச் சென்றது யார் என்ன என்று தெரிய வில்லை. இதற்கிடையே, சபியுல்லா உறவினர்கள் இறந்தவர்களின்உடலை பெற்றுக்கொண்டு உயிர் தப்பிய தன்வீருடன் தெல்காவை தேடினர். எங்கு தேடியும் சிறுவன் தெல்கா இன்று வரை கிடைக்கவில்லை.

                     இது குறித்து, தெல்கா உறவினர் கூறுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் தெல்காவை கண்டுபிடிக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். ஆனால், இதுவரை தெல்கா இருக்குமிடம் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. சுனாமியில் உயிர் தப்பிய தன்வீர் எங்களுடன் இருப்பது மட்டுமே எங்களுக்கு கிடைத்த ஆறுதல்' என்றனர்.குளச்சலில் பிறந்து, சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், தட்டுதடுமாறி செல்லும் முதியவர்கள் வரை 414 பேரை காவு கொண்டது சுனாமி. இதில் 21 நாட்களே ஆன சின்னஞ்சிறு குழந்தை உட்பட 23 பேரின் உடல்களை கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சுனாமியின் கோரதாண்டவம் இருந்தது. 5வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று குளச்சல் மற்றும் கொட்டில்பாட்டில் உள்ள சுனாமி நினைவிடங்களில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior