கடலூர்:
கடலூரில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து தேவாலயங்களுக்குச் சென்று வழிபட்டனர். தேவாலயங்கள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
சில ஆலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கும், பல ஆலயங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் உள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது. குழந்தை யேசுவை வரவேற்று பாடல்கள் பாடப்பட்டன. பங்குத் தந்தை அல்போன்ஸ் சந்தானம் அடிகள் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
திருப்பாப்புலியூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியநாதன் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. கடலூர் புனித வளனார் கல்லூரிச் சாலையில் உள்ள தூய எப்பிபெனி ஆலயம், பழைய மருத்துவமனைச் சாலையில் உள்ள தூயயோவான் ஆலயம், பாரதி சாலையில் உள்ள ஏ.எல்.சி. ஆலயம், செம்ண்டலம் டி.இ.எல்.சி. பாவநாசர் ஆலயம் சொரக்கல்பட்டு ஏழாம் நாள் அட்வென்ட் ஆலயம், முதுநகர் புனித சவேரியார் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக