உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 26, 2009

சுனாமி சோகத்திற்கு இன்று ஐந்தாம் ஆண்டு சிதம்பரம் கடற்கரை கிராமங்களில் அஞ்சலி

சிதம்பரம் :

                        சுனாமி சோகம் நடந்து இன்றுடன் ஐந்தாம் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி சிதம்பரம் கடற்கரை மீனவ கிராமங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.சுனாமி ஆழிப்பேரலை, நொடிப்பொழுதில் லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கியதும், கடற்கரை கிராமங்களை சின்னாபின்னமாக்கியதும் நெஞ்சை விட்டு நீங்கா பெரும் சோகமாகும். இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் (26ம் தேதி) ஐந்து ஆண்டு நிறைவு பெறுகிறது.

                      சுனாமியால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசு மற்றும் தொண்டு அமைப்புகள் சார்பில், நிவாரணங்கள் மேற்கொண்டு அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திக் கொடுத்துள்ள போதும் தாய், தந்தையை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், உறவுகளை இழந்தவர்கள் இன்றும் அந்த சோகத்தில் இருந்து முழுமையாக விடுபடாதவர்களாகவே உள்ளனர்.இந்நிலையில், சுனாமி சோக சம்பவம் நடந்து இன்றுடன் ஐந்து ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி பல இடங்களில் இன்று அஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது.சிதம்பரம் கிராமங்களான; பரங்கிப்பேட்டை, அன்னன்கோவில், பெரியக்குப்பம், சாமியார்பேட்டை மற்றும் கிள்ளை முழுக்குத்துறை, சின்னவாய்க்கால், நடுமுடசல் ஓடை, பிச்சாவரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புண்ணியாதானம், மனித சங்கிலி, தீப ஜோதி ஓட்டம், அமைதி ஊர்வலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடக்கின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior