திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மார்க்கெட் கமிட்டியை சுற்றியுள்ள 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். காலம் தவறிய மழை, பருவ நிலை மாற்றங்களால் இப்பகுதி விவசாயிகள் பணப்பயிரான வேர்கடலை, எள், மல்லி போன்றவற்றை பயிரிடுவதை தவிர்த்தனர். மாறாக மானாவாரி பயிர்களான மக்காச் சோளம், சூரியகாந்தி பயிரிடுவதில் ஆர்வம் கட்ட துவங்கியுள்ளனர். இதற்கு காரணம் பணப்பயிர்கள் 120 நாட்கள் வளரக்கூடியவை. ஆனால் மக்காசோளம் 100 நாளில் அறுவடை செய்ய முடிகிறது. ஏக்கருக்கு 30 மூட்டை வரை மகசூல் கிடைப்பதால், விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதை விரும்புகின்றனர். இதன் காரணமாக எப்போதும் வேர்கடலை, எள் மற்றும் மல்லி வரத்தே அதிகமாக இருக்கும் திட்டக் குடி மார்க்கெட் கமிட்டிக்கு இந்தாண்டு வழக்கத் திற்கு மாறாக மக்காச்சோளம் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை மக்காச்சோளம் 60 மூட்டைகளும், வேர்கடலை 11 மூட்டைகளும், எள் ஒரு மூட் டையும் விற்பனைக்கு வந்தன. இதில் 80 கிலோ மூட்டை வேர்கடலை 3, 234 ரூபாய்க்கும், 80 கிலோ எள் 2,429க்கும், 40 கிலோ மூட்டை மல்லி 1,589க்கு விலை போனது. 100 கிலோ கொண்ட மக்காச்சோளம் 854 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஒரு ஆண்டாகவே திட்டக்குடி மார்க்கெட் கமிட்டி இலக்கை அடைய மக்காச்சோளம் பயிரே உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக