ராமநத்தம் :
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடுகள் உலர் களமாக மாறிவருவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அவலம் நிலவி வருகிறது.சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கழுதூர், வேப்பூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையூறு இல்லாமல் சாலையை கடந்து செல்ல மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலங்களின் அருகே தடையற்ற போக் குவரத்து மற்றும் உள்ளூர் பஸ்கள் நிறுத்தி செல்லவும், பயணிகள் பாதுகாப் பாக செல்லவும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கப் பட் டது. இந்த சர்வீஸ் ரோடுகளை அப்பகுதி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் பயிரிட்டுள்ள எள், உளுந்து, கொத்தமல்லி, மக்காசோளம் உள் ளிட்ட பயிர்களை அறுவடை செய்து தானியத்தை பிரித் தெடுக் கும் உலர் களமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தானியங்களில் வழுக்கு விழும் நிலை தொடர்கிறது.இதனை தவிர்த்திட தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து செல்லும் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினரும் சர்வீஸ் ரோடுகளில் விவசாயிகள் ஆக்கிரமித்து தானிய கதிர்களை உலர வைப்பதை தடுத்து, ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள தானிய களத்தை பயன்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக